மகள் எனது நகல்
மகள் எனது நகல்
என்னை என் முன்னால்
எனக்கு நாள்தோறும்
ஏதேனும் சிறு செயல்களின்
வாயிலாக தொடர்ந்து
காட்சிப்படுத்திடும்...
எனக்குள் உருவாகி...
என்னவள் மூலமாக...
மண்ணுலகத்திற்கு
எனது நகலாக உலாவந்த
அழகு தேவதை..
கருவறையை விட்டு
வெளியே வந்து
வெளிக்காற்றை
முதல் முதலாக
அழுகையோடு சுவாசித்து
எங்களை உவகை
கொள்ள வைத்த
இறைவனின் வரம்..
என்னைப் பெற்ற
அன்னையை காணும்
எண்ணமும் , ஆசையும்
என்னுள் எழுந்த, எழுகின்ற
வேளைகளிலெல்லாம்
அவள் செய்திடும்
எத்தனையோ செயல்களால்
எனதன்னையாகவே
என் கண்களின் முன்
தெரிந்திருக்கிறாள்..
என்னை போலவே.. அவளும்
இருப்பதனால் அவளில்
என்னைப் பார்த்து
என்னிடம் இன்னும்
தேவையான மாற்றங்களை
உணர்ந்து என்னையே
நான் மாற்றிக்கொண்ட
தருணங்களும் உண்டு..
எனது மகள்
எனது நகலாக மட்டுமில்லாமல்
என்னை பெற்றவளின்
நகலுமாக இருப்பதனால்
மகளே எனது உலகமானாள்.
