ஆதிபகவனைக் காண்கிறேன்
ஆதிபகவனைக் காண்கிறேன்
1 min
382
அன்பின் அரசியே...
அ என்ற முதல் எழுத்திலே...
அகிலத்தை உணர்த்தியவளே...
அம்மா என்று அழைக்கா ஜீவன் உண்டோ?
அன்பாய் வளர்த்து...
அழகாய் பெயரிட்டு...
அறிவாற்றல் பெருகச் செய்து...
அன்று முதல் இன்றுவரை...
அரவணைத்து காத்து...
அம்புலிமாமாவைக் காட்டி என்னை ஏமாற்றி...
அன்புடன் சாதம் ஊட்டி...
ஆறுதலாய் எனக்கிருந்தவளே..
அல்லும் பகலும் எனக்காக உழைத்து...
ஆசையாய் எனக்கு அன்பு முத்தம் இட்டு...
ஆசானாய் மாறி...
ஆசிகளையும் தந்து...
ஆண்டவனுக்கு நிகராய் வலம் வரும் அன்னையே....
அ என்ற முதல் எழுத்தே உனக்கு முக்கியத்துவம் அளித்து விட்டது...
ஆதிபகவன் கண்களுக்கு முன் காட்சியளிக்காவிட்டாலும்....
அந்த ஆதிபகவனையே உன்னில் காண்கிறேன்...
ஆருயிர் அம்மாவே...
அன்போடு என் மனதை ஆட்சி செய்வாயாக....
