மழலையின் அமுது
மழலையின் அமுது


என் தங்க தாரகையே
என் மடி மீது சாய்ந்தாயே..
தத்தி தவழ்ந்து என்னை
நெஞ்சோடு கட்டி அணைத்தாயே..
தலையில் வீசும் வாசம் ௭ன்மேலே நறுமணமாய் வீசியதே..
வாய் பேசும் மழலை மொழிகளும் புரியாமல் ரசித்தேனே..
<Advertisementbr>
உன் குருகுரு பார்வையில் என்னை பற்றி இழுத்தாயே..
உன்னை முத்தமிட்டு கொஞ்சி மகிழ உமிழ்நீரும் சுரந்ததே..
உன் இதழ்களின் ஓரம் வழியும் தேன் அமுதை சுவைக்க தேனீக்களும் விரைந்தே...
கைவிரல்கலால் தட்டி தழுவும் போதும் மண்டியிட்டு தவழும்போதும் தன்னை மறந்து உரைந்து நின்றேனே...