STORYMIRROR

sowndari samarasam

Inspirational

2  

sowndari samarasam

Inspirational

விடியலை தேடு

விடியலை தேடு

1 min
158

சிலர் உன்னை விட்டு

தூரம் செல்ல

நினைக்கிறார்கள்..

சிலர் உன்னை தேடி

பழக நினைக்கிறார்கள்.. 

யாரோ ஒருவர்

வருவதும் போவதும்

உலகியல் நீதியாக தென்பட்டாலும் வாழ்க்கையில்

பல அனுபவங்களை

கற்றுக் கொடுத்துதான்

செல்கிறார்கள்..

எதிர்பார்ப்புகளும்

ஏமாற்றங்களும்

வந்து போவதும்

தனிமையில் வாடும்போது

கைகொடுத்து

தோள்சாய்த்து கொள்ள

யாரோ ஒருவரை

தேடித்தான் செல்கிறது

மனம்..

அதன் போக்கிலேயே செல்ல

தனி பாதையும் உனக்கென்று

உருவாகிறது..

நீ போகும் திசை

தனித்துவம் வாய்ந்ததாக

இருந்தாலும் உன்னை உயர்வாக காட்டிக்கொள்ள

நீ எந்த முயற்சியும்

எடுக்க வேண்டடிய

சூழ்நிலைகள் கட்டாயம்

இருக்க வேண்டுமென்றே

நினைக்கிறன்...


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational