அபூர்வமான காதல்
அபூர்வமான காதல்
காதலித்துப்பார் அன்பின் ஆழம் புரியும் என்றாய் காதலித்தேன்!
காதல் ஒரு இனிமையான ராகம் என்று புரிந்தது அதுவே சுவாசமென கொண்டேன்!
இதயத்தில் உருகிய உன் நினைவில் மூழ்கி நின்றேன் கரையும் உன் இதயம் கனவிலும் கண்டேன்!
காரணமேதும் இல்லை சில புரிதல்கள் இன்றி விடைபெற்றாய் நானும் ஏற்றுக்கொண்டேன் விட்டு செல்ல என் இதயத்தில் உன் நினைவுகளாய் ஒரு பாகம் அப்படியே இருக்கிறது..மூச்சு காற்றில் உன் வாசம் கொண்டு உன்னை பின்தொடர்வேன்! அன்பின் எல்லை அளவற்றது எண்ணிலும் அடங்காது என்னை இழுத்துச்செல்லும் ஒரு அபூர்வமான காதலது..