STORYMIRROR

Kathir ES

Abstract Romance

4  

Kathir ES

Abstract Romance

வருங்கால மனைவிக்கு

வருங்கால மனைவிக்கு

1 min
404

வாழும் காலமெல்லாம் நமக்காக

வயது வரம்பெல்லாம் நமக்கில்லை

வாலிபம் வாங்கி வாயுள்ளமட்டும்  

வளமை ஓங்கி நோயில்லாமல்

பேசியே சலிப்போம் 

பேசாமலும் சமாளிப்போம்

இருவர்க்கு இலக்கணமாய்

இல்லோர்க்கு எடுத்துக்காட்டாய்

கணக்காக காமம் கொண்டு

கணக்கில்லா இன்பம் கண்டு

உருவ வண்ணம் ஒன்றில்லாமல் போனாலும்,

இருவர் எண்ணம் ஒன்றென்று

மனையில்லா நிலை வந்தாலும்

துணைவியாய் நிலைக்கப்போகும்

வருங்கால மனைவியே....


Rate this content
Log in

Similar tamil poem from Abstract