தெம்மாங்கு
தெம்மாங்கு
1 min
231
ஆனி மாசம் என் ராணி
அத்தான் பேச்ச கேளு நீ
குறுவை நெல்லடியோ
குனிஞ்சு நல்லா ஊனடியோ...
கூறுகெட்ட என் மாமோய்
ஏர்பிடிச்சு நேரா ஒட்டு மாமோய்..
ஆனி மாசம் என் ராணி
அத்தான் பேச்ச கேளு நீ
ஆடி வந்தா தாங்காதடி நாத்து
நீ ஆடி வந்த அப்போ தூங்காதடி என் காத்து
ஓடியாடும் பிள்ளை இருக்கு மாமோய்..
உனக்கு ரொம்ப ஆசை இருக்கு ஆமோய்..
செந்நெல் பயிரிருக்கு, செவத்தகிளி என் கூடயிருக்க
ஆசைக்கு ஏதடி பஞ்சம் என் அத்த மவளே உனக்கு எதுக்கு கஞ்சம்
ஆனி மாசம் என் ராணி
அத்தான் பேச்ச கேளு நீ