STORYMIRROR

ரெஜோவாசன் Rejovasan

Romance

4  

ரெஜோவாசன் Rejovasan

Romance

கடைசிச் சந்திப்பின் தேநீர் கோப்பை

கடைசிச் சந்திப்பின் தேநீர் கோப்பை

1 min
293

எனக்கு பிடித்த பாடல்கள் 

இனி உன்னுடையதல்ல 


எதற்காக இன்னும் 

என் சொற்களின் மேலேறி 

பவனி வருகிறாய்


எனது இரவுகள் உனக்கானதில்லை 


எதை நினைவுபடுத்த

மீண்டுமென் கதவு தட்டுகிறாய்


நம் கடைசிச் சந்திப்பில் 

நீ அருந்திய 

தேனீர் கோப்பையின் அடியில்

காய்ந்து போய் கிடக்கின்றன

உன் உதடுகள்


எல்லா பேருந்து ஜன்னல்களிலும்

இன்னமும் நீ 


நீ என்பது 

நீ மட்டுமல்ல

உன் நினைவுகளும் தான்


உன் நினைவுகளென்பது

நினைவுகள் மட்டும் தான்

நீ அல்ல


***


Rate this content
Log in

Similar tamil poem from Romance