STORYMIRROR

ரெஜோவாசன் Rejovasan

Romance

4  

ரெஜோவாசன் Rejovasan

Romance

ஜன்னல் பூனைகள்

ஜன்னல் பூனைகள்

1 min
238

வசந்தத்தின் நிறங்கள் உன்னிடம்

யாரும் நுழையா காடு என்னிடம்

வா

உதிர்ந்த நிறங்களை அள்ளி

பூக்களில் தூவுவோம்


பிரளயத்தின் நா உன்னிடம்

பெருந்தாகம் என்னிடம்

வா 

கொஞ்சம் ஒயின் ஊற்று

இதயங்கள் நனைப்போம்


யாமத்தின் வரவேற்பறை உன்னிடம்

காலத்தின் முடிவிலி என்னிடம் 

வா 

இந்த இரவின் நதியினில்

இரு மீன்களாவோம்


மின்மினிகள் உன்னிடம்

காய்ந்த சுள்ளிகள் என்னிடம்

வா

உள்ளங்கைகளுக்குள் வைத்து 

ஊதித் தீ மூட்டுவோம்


அரூபத்தின் தேகம் உன்னிடம்

ரகசியத்தின் சாவி என்னிடம்

வா

மோனத்தின் பனியிடுக்குகளில்

கஸல்கள் தேடுவோம்


சின்னஞ் சிறிய பூனைகள் உன்னிடம்

மழை நெளியும் ஜன்னல்கள் என்னிடம்

வா 

நீயும் நானும் மட்டுமே இந்தத் தீவினில்

வேடிக்கை பார்த்திருப்போம்

***


Rate this content
Log in

Similar tamil poem from Romance