காரிருளின் காரிகையே
காரிருளின் காரிகையே
உன்னை வரைந்தது யாரோ
யாதும் அறியா இருளில்
நீ அறிவித்தது அநேகம்
விளக்கொளியில் முகம் போல
நீலக்கோளம் நீந்துது உன் பவளக்கீற்றில்
பாவைக்கும் நீயே உவமை
கவிஞன் எழுத்து கோர்வைக்கும் நீயே வளமை
நீ நீல மகளின் இரவுத் துணை
அவள் உன் ஒளிக்கீற்றை பிடித்து பயணம் போகிறாள்
யாரைக் காணவோ
உன்னை வரைந்தது யாரோ
முகம் காட்ட வெட்கி
கார் முகிலில் மூழ்கியதேனோ
வாசம் செய்ய வந்தவனை
வழித்தடம் தெரியாமல் செய்ததேனோ
மோசம் செய்யாமல் முளைத்து தான் வாயேன்
உன் வண்ணச்சுவடறிய பாதையில் நானே
உன்னை வண்ணமிட்டது யாரோ
காரிருளின் காரிகையே
உன்னை வரைந்தது யாரோ