முதலும் முடிவும் ஆனவள்...!!!
முதலும் முடிவும் ஆனவள்...!!!
அரும்பு மீசை அரும்பும் முன்னே
அறியாது நுழைந்தது என்னவளின்
முதல் பார்வையின் தாக்கத்தால் எனது முதல் காதல்....
எங்கிருந்தோ வந்தாள் தேவதையாய்
மின்னல் போல் வந்ததும் மறைந்தும் போனாள்
என் மனதில் ஒளியின் தாக்கத்தை புகுத்தி விட்டு...!!
எங்கிருந்து வந்தாளோ எவ்விடம் சென்றாளோ
ஏதும் அறியாது தவிர்க்க மனமும் புலம்ப
செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த என் கண் முன்
மறுபடியும் வந்து விழுந்தாள்...
தற்செயலான சந்திப்பாய் நான் எண்ண
என்னை சந்திக்கவே வந்த அவளின் புன்னகையில் கூட
அவள் மனம் அறியாது இருந்த என்னிடம்
நட்பாய் அருகில் வந்து பேசினாள்...
அவள் அருகாமை என்னை மௌனமாக்க
என் மனம் படும் பாட்டை அவளும் ரசிக்க
வெட்கத்தில் சிவந்தது என்னவோ என் முகம் தான்...
என் முதலும் முடிவும் ஆனவள்
இப்பொழுது வயதான பின்பும் கூட
என்னை வெட்கப்பட வைக்கிறாள்
அவளது காந்தப் பார்வையால்....!!!!
- நித்யஶ்ரீ சரவணன்