மதிக்க கற்றுக் கொள்
மதிக்க கற்றுக் கொள்


என்னை தொட்டு தழுவவும் கட்டி அணைக்கவும்
நான் ஒன்றும் உன் கையிலிருக்கும் பொம்மை அல்ல
உணர்வும் சதையும் உள்ள பெண்
உடற்கூறில் சிறு மாறுபாடு என்பதற்காக
காமம் தோன்றுமா என்ன ?
தாயாக கருவினில் சுமந்து வலி எடுத்து பெற்று
நன்முறையில் வளரத் துடிக்கும் தாய்மையானவள்
மகளாய் மனைவியாய் தாயாய் மருமகளாய் மாமியாராய்
தோழியாய் பல பரிமாணம் எடுக்கும் அவளின் உள்ளமோ
எப்போழுதும் மென்மையே...
பூவினும் மென்மையான அவளை
வார்த்தையால் பார்வையால்
செயலால் இகழ்ச்சியால்
உன் இச்சையால் காயப்படுத்தாதே
கருகிவிடுவாள் தனக்குள்ளே புதைத்து விடுவாள்...
வதைக்காதே வஞ்சிக்க முயற்சிக்காதே
அவளுக்கும் கொஞ்சம் மனம் இருக்கின்றது என நினை
உடலால் பல அவதிகள் பட்டு
பிரசவத்தில் மறு சனனம் எடுத்து வரும்
அவள் கடவுளின் மறு உருவம்
வணங்காவிட்டாலும் மதிக்க கற்றுக் கொள்...!