காந்தப் பார்வை
காந்தப் பார்வை


மின்சாரத்தை விட அதிக சக்தி வாய்ந்தது தான்
அவளது கண்கள்....
பார்த்தவுடனேயே என் கண்களை கவர்ந்து
உள்ளத்தை கொள்ளை கொண்டு
காதல் நோயை பரப்பி
அனுதினமும் அவள் நினைவுகளுடனும்
தூக்கம் இல்லா நேரத்தில் பல வண்ண கனவுகளுடனும்
சுற்ற வைத்து அவள் மீது பைத்தியம் ஆக்கி
பின்னாலேயே சுற்ற வைத்தாள்...
விழியால் பேசி புன்னகையால் கவர்ந்து
கன்னக் குழியில் தடுக்கி விழ செய்து
>
நொடியும் பிரியாது நினைவுகளில் நின்றவளோ
ஏதும் அறியாதது போல் என்னை கடந்து சென்றாள்....
தென்றலாய் வந்து மோதிச் சென்றவளின்
பின்னால் செல்லும் மனதை அடக்க தெரியாமல் நான் இருக்க
அடிக்கடி என்னை திரும்பிப் பார்த்து
அவளது காந்தப் பார்வையில் என்னை கட்டி இழுத்துச் செல்ல
பாவை அவள் பார்த்த பார்வை தந்த தைரியத்தில்
காதல் சொல்லத் துணிந்தேன்
அவள் பின்னாலேயே சென்றேன்....!!!
- நித்யஶ்ரீ சரவணன்