Tamizh muhil Prakasam

Romance Inspirational

5.0  

Tamizh muhil Prakasam

Romance Inspirational

நினைவுகள்

நினைவுகள்

1 min
2.3K


நெடுந்தூர இரவுப் பயணமொன்றில்

இருளுக்குத் வழித்துணையாய்

வான வீதியில் உலா வரும்

நிலவுப் பந்தினைப் போலவே

ஏகாந்தம் அப்பியிருக்கும்

மன மாளிகையில் துணையாய்

எந்நேரமும் நினைவு அலைகள்!


நினைவுகள் - எண்ணங்களாய்

இதழோரம் சட்டெனப் பூக்கும்

சிறு கீற்றுப் புன்னகையாய்

மனதை மலரச் செய்யும் !


வெறுமை சூழ்ந்திட்ட 

மனம் தனை - சமயங்களில்

பாலையில் விழுந்திட்ட

சிறு மழைத்துளியாய்

நனைத்திடும் -

விழியோரம் எட்டிப் பார்க்கும்

கண்ணீர்த் துளிகள்!


என்றோ மரணத்தை தழுவிய

மனதின் ஏதோ ஒரு

இருள் சூழ்ந்த மூலையில்

எஞ்சி இருக்கும் ஆன்மாவை

தட்டிப் பார்த்து - 

வருடிச் செல்லும் தென்றலாய்

தாலாட்டிச் செல்லும் - நினைவுகள் !


Rate this content
Log in

Similar tamil poem from Romance