விழியின் சிறையில்
விழியின் சிறையில்
உந்தன் பார்வை
எந்தன் மேல் விழும்போது
எந்தன் காதில்
காதல்தேன் ரிங்காரமிடுகிறது
என் நெஞ்சில்
வண்ணப்பூச்சிகள் பறக்கின்றன
பின்னனியில் ஆஸ்கர்
சங்கீதம் வாசிக்கிறார்
மழைக்கு முன்
மண்வாசம் போல்
உனக்கு முன்
உந்தன் வாசம்
எந்தன் நெஞ்சை
சிறைபிடித்து கொண்டது
விடுதலை பெற
முடியாமல் தவிக்கிறது
எந்தன் மனம்
உன்னை பார்க்க
துடிக்கும் எனது
கண்களை ஏன்
உன் கண்களால்
கைது செய்தாய்?
இப்போது நான் உன்னை
பார்ப்பது எப்படி?