என்னவனே! கள்வனே!
என்னவனே! கள்வனே!


விண்மீன்களின் கூட்டத்தில்
என்னவன் மட்டும்
தனியாக தெரிகின்றாய்
என்னவன் அழகில்
விண்மீன்கள் தோற்றுவிட்டனர்
என்னவனின் மனதிற்கு முன்
நிலவின் வெண்மையும் தோற்றுவிடும்
என்னவனின் கோபத்திற்கு முன்
சூரியனின் அனலும் தோற்றுவிடும்
என்னவனின் கொஞ்சலில்
குழந்தையும் தோற்றது
இத்தனை பேர்களை
வென்ற உன்னை
நான் எப்படி வெல்ல
போகிறேன் என்று தெரியவில்லையே!!
என் மனதை திருடிய
கள்வனே! நீயே சொல்
உன்னை வெல்வது
எப்படி என்று?