முதல் காதல்
முதல் காதல்


அறியா பருவத்தில் தெரியாமலேயே
உள் நுழைந்த
என் முதல் காதல்.....
என்னவளின் மீது
ஏற்பட்ட ஈர்ப்பை
அவளிடம் சொல்லாமலே
மனதிற்குள் பூட்ட
மனமில்லாமல்
அவள் செல்லும்
இடமெல்லாம்
பின் தொடர்ந்தேன்......
நான் தொடர்வதை உணர்ந்தவளோ
திரும்பிப் பார்த்து முறைத்தாள்
என்ன என்ற கேள்வியோடு
புருவங்கள் ஏறி இறங்க
தைரியத்தை வரவழைத்துக் கொண்ட
நானோ.....
மெதுவாக அருகில் சென்றேன்....
உன்னை பிடித்திருக்கிறது
என்றேன்.......
அனல் பறக்கும் பார்வை
பார்த்தவள்
ஆறாம் வகுப்பிலேயே காதலா.....
போய் படிக்கிற வேலையைப் பார்
என துரத்தி அனுப்பினாள்....
மனம் வாடினாலும்
படிப்பு முடியும் வரை
அமைதி காத்தேன்.....
பன்னிரண்டாம் வகுப்பு
தேர்வு முடிந்த அந்நாளே
அவள் முன் போய் நின்றேன்
நீ திருந்தவே மாட்டாயா.....
என கோபித்துக் கொண்டவள் செப்பல் பிய்ந்து விடும் என்றாள்...
நம்மால் ஏன் செப்பல் பிய்வானேன்
அவள் மென் பாதத்தில்
ஏதேனும் குத்திவிட்டால்
என் இதயம் வலிக்குமே
என திரும்பி நடந்தவன்
இறுதியாக ஒருமுறை
என்னவளின் முகத்தை
திரும்பிப் பார்த்தேன்
கோபத்தில் சிவந்திருந்த முகம்
இன்னும் அழகாய் இருக்க
இதயம் அதை படம்பிடிக்க
பத்திரமாய் உள்ளே
பதுக்கிக் கொண்டேன்.....
கல்லூரியில் எத்தனையோ காதல் தேடி வந்தும் என்னவளின் நினைவு
எப்பொழுதும் இருக்க
எந்த சலனமும் ஏற்படவில்லை....
படிப்பு முடிந்ததுமே
வேலையும் கிடைத்தாகிவிட்டது
இப்போதேனும்
போய் பார்ப்போமே
என எண்ணும் போது
எங்கிருக்கிறாள் என அறியாது எங்கே சென்று பார்ப்பது
என விரக்தியில் நானிருக்க
தற்செயலாக ஒருநாள்
தென்றலென வந்தவள்
என்னைக் கடந்து செல்கையில்
அழகாய் புன்னகையை
வீசிச் செல்ல
அவள் பார்வையில்
இருந்த காதல்
என்னை அவள் பின்னே
இழுக்க.....
நான் பேசுவதற்கு முன்பே
கவிதையாய் மொழிந்தவள்
என்னைக் காதலிப்பதாய் சொன்னாள்
இந்த நாளுக்காகவே
இத்தனை வருடம்
காத்திருந்தேன் என்றவளை
அள்ளி அணைக்கத்
துடித்த கைகள்
இடம் கருதி
அமைதி காக்க
இனிதே தொடங்கியது
எங்கள் காதல் பயணம்......