STORYMIRROR

Nithyasree Saravanan

Inspirational

4  

Nithyasree Saravanan

Inspirational

கூத்து

கூத்து

1 min
273

விதியின் சதியால் கீழே விழுந்தோமானால் 

இது தான் சமயம் என கைகொட்டி சிரிக்க பலர் உண்டு 

ஆனால் உதவிக்கரம் நீட்ட ? 

நொந்து போய் இருக்கும் நம்மை சீண்டவே காத்திருக்கும் சிலர் 

நம் இழப்பை புரியாது உணர்வுகளை மதிக்காது வேண்டுமென்றே 

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றி 

புண்ணை இன்னும் பெரிதாக்க 

ஆறுதல் சொல்லி அரவணைக்க யாரும் வருவாரோ என 

காத்திருக்கும் நமக்கோ பல சமயம் ஏமாற்றமே மிஞ்சும்..... 

மனதில் இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தேயும் 

அப்பொழுது சிலர் வருவர் நம்பிக்கையை ஊட்டுவது போல 

நாமும் நம்பி கரம் பற்ற பாதியில் விட்டு விடுவர் 

நம் முதுகுக்கு பின்னே பலவாறு பேசுவர்..... 

நம் சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி நம்மிடமிருந்து பலன் பெற்று 

பின் நம்மையே யார் என்று கேட்கும் சிலரும் உண்டு 

இத்தனையும் கடைந்து இறையருளால் முன்னேறி வந்தால் 

என்னால் தான் எல்லாம் 

நான் தான் உதவி செய்து காப்பாற்றினேன் என 

புன்னகையோடு நம்மோடு ஒட்டிக்கொள்ள சிலரும் வருவதுண்டு 

அனைவர் வாழ்விலும் ஏதோ ஓர் சமயம் நடக்கும் கூத்து தான் இது.....!!! 

- நித்யஶ்ரீ சரவணன் 


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational