காதல் வேட்கை
காதல் வேட்கை


சிதறித் தெறித்த சிறு மழைத்துளி
சிந்தைக்குள் சிலிர்த்தது
பட்டும் படாமல் பேசும்
உன் சிங்காரக் குரலைப் போல
காதுமடல் சொருகிய மயிர் கீற்றில்
காட்டுத்தீ பரவியது
தொட்டும் தொடாமல் உராயும்
உன் சுவாச சுவாலைப் போல
கழுத்தில் கரும் மச்சம் ஒன்று
கரையத் தவிக்குது
பார்த்தும் பார்க்காமல் உருளும்
உன் காந்த கருவிழி போல
வீராப்பில் மிச்சம் மீதி எல்லாம்
வீணை மீட்டுது
விட்டும் விடாமல் கோர்க்கும்
>
உன் தீஞ்சுவை விரல் போல
கரும் புரவியில்
காதல் கடிவாளம் கட்டி
ஆளில்லா தீவிற்கு
என்னைக் கடத்திச் செல்வாயா
சினுங்கித் தவிக்கும்
என் பாத கொலுசின்
சத்தம் அடங்க
முத்தம் கொடுப்பாயா
இருட்டைக் கிழித்து
எட்டிப் பார்க்கும்
குறுக்குப் பிறையை
இறுக்கி அணைப்பாயா
புல்லில் வெடித்த
கூதிர் பருவாய்
உறைந்து கிடக்கும்
மார்பில் வியர்ப்பாயா