நீயில்லாமல் நானில்லை
நீயில்லாமல் நானில்லை
உன் நாணம் நீ மறந்தாய்
என் தயக்கம் நீ தவிர்த்தாய்
சொல்லாத ஒன்றை நீ சொல்ல..
கேளாத ஒன்றை நான் கேட்டிட..
இஃது சித்திரை மாத மழையோ!?
இணைதல் சுகம்..
நனைதல் சுகம்..
இணைந்து நனைதல் சுகமே சுகம்...!
இரு இதயம் ஒன்றாய்த் துடிக்க..
மும்முடிச்சு சம்பிறதாயம்.,
தாரம் ஆகிட தூரமில்லை நாட்கள் நகர்ந்திடும்
நீ நகர்ந்தாலோ அடுத்த நொடியும் வெகுதூரம்.
பனிக்குட உறக்கம்
உன் மடி சாய உணர்கிறேன்.
அன்னம் நீ..
உன் அண்ணம் கொண்டு அன்னமிடு
என் எண்ணம் நான் மறப்பேன்.
ஆழ்கடல் கலவியில் அமுதென்பதை அறிவோம்.,
உனக்கோர் சூரியன் எம்மைப்போல்
எனக்கோர் நிலவு உம்மைப்போல்
சிறு குடும்பம் அமைப்போம்..
காயாயினும் பழமாயினும்
ஆரம்பம் மலரே
வாழ்க்கையெனும் அவ்வொரு மரத்தில்...!
நீயில்லா நானில்லை எந்நாளும்
அண்டத்தில் தான் வானில்லா நட்சத்திரம்...!