புத்தாக்கம்(புத்தகம்)
புத்தாக்கம்(புத்தகம்)
1 min
343
ஒத்தையடிப் பாதையில
ஒத்தையில நெடுந்தூரம் நடந்திருக்க
ஒற்றை மாமர நிழலுல
ஒரு ஓரமாய் நான் அமர
ஒரு சோடிக் கிளிகள்
ஒரு கிளைதனில் காதல் செய்ய
ஒருமையில் என் மனம் தவித்து
ஒரு நிமிடம் நான் யோசிக்க
ஒன்றாம் வகுப்பிலிருந்து உரு மாறி பொருள் மாறி
ஒரு பானை சோத்துல
ஒரு சோறும் விடாம பதமாக்குகிற
ஒரு வேறுபாடும் பார்க்கா
ஒன்றி இருந்து ஓர வஞ்சனை காட்டா
ஒரு 'மை'யினாலான நண்பன்
ஒத்துழைத்து அவனிருக்க
ஒவ்வொரு பக்கமாய் அவனைத் திறக்க
ஒரு ஆயிரம் கேள்வி கேட்டு பதில் தந்து
ஒரு மனதை முழுமை செய்தான்
ஒருநாள் தனிமையினை நான் வென்றுவிட்டேன்.