விழிக்கான விடையாதோ ?
விழிக்கான விடையாதோ ?
அகத்தை ஆட்கொள்ள ஆவல் தான்
அவளின் அனுமதியுடன்
அறவே அகலவும் ஆயத்தம் தான்
அவளின் அகமகிழ்வுடன்
ஆட்கொள்ள அனுமதியா
அறவே அகல ஆர்வமா
எதுவாயினும் ஏற்றுக்கொள்வேன்
எனதாயின் பற்றிக்கொள்வேன்
பார்வையை படிக்க தெரிந்திருந்தால்
பார்த்தவுடனே அறிந்திருப்பேன்
சேர்வையை நானும் விடுத்திருந்தால்
சேதாரமின்றி வாழ்ந்திருப்பேன்
கோர்வையாய் நானும் பார்த்திருந்தால்
கோட்டைகூட கட்டியிருப்பேன்
போர்வையாய் நானும் இருந்திருந்தால்
போதும்வரை காத்திருப்பேன்
பழகுவதில் தயக்கமா
பார்ப்பதில் தான் வருத்தமா
பார்த்து பேச அச்சமா
அச்சத்தால் வார்த்தை மிச்சமா
தனிமையால் இனிமையா
இனிமையால் தனிமையா
வினாக்கள் அடங்குமா
விடைகள் தான் கிடைக்குமா
பதிலில் வேண்டாம் மறைமுகம்
மனதில் வைத்தேன் மதிமுகம்
அகத்தில் ஆவல் என உணர்கிறேன்
அறிந்ததால் ஈதல் தந்து நிற்கிறேன்
முகத்தில் தேடல் அதை மறைக்கிறாய்
முத்தான ஊடல் அதை தவிர்க்கிறாய்
கயல்விழி களவாடிய எந்தன் மனதில்
கணு ஒன்று கண்டேன்
கவணான கண்களால்
p>
சுடர்விழியும் கண்டேன் கயல்விழியில்
மனம் இன்றி கடந்தேன்
மட்டற்ற மயர்வினால்
மலர்விழியால் மாறிய என் வாழ்வில்
மனம் மாற தயங்கினேன்
மருளான மாதுவால்
பார்க்கா நேரம் பார்க்க பார்க்கும் பார்வையை பார்க்க பார்க்கிறேன் பார்க்கும் நேரம் பார்க்கும் பார்வையை பரவ விடுதலால்
பரவ விடுதலை விடுத்து
படர விட்டால் பாமர பாணியிலும்
பண்டித ஞானியாவேன்
என்னிடமுள்ள பல வினாக்களுக்கு
விடைகள் கிடையாது
வழக்கமான வினாவாக
இவ்வினா கிடையாது
விழியினால் ஆன வினாவை
விதியின் மூலம் பெற்றுக்கொண்டேன்
விரும்பினால் அந்த வினாவின்
விடையினை நானும் அறிந்து கொள்வேன்
விடையறிய மறுக்காமல்
விடையறிந்து மறுக்கிறாயா
விழி மூலம் சொல்லாமல்
விழி முன் சொல்கிறாயா
விடையை சொல்லுமுன்
வினாவை மீண்டும் சொல்கிறேன்
விழியழகியின் விழிக்கான
விடையாதோ ¿ ?