STORYMIRROR

David Rad

Abstract Tragedy Others

5  

David Rad

Abstract Tragedy Others

வேற்றுமையில் ஒற்றுமையா ?

வேற்றுமையில் ஒற்றுமையா ?

1 min
501


வாழு பிறரையும் வாழ விடு

நன்றாய் வாழ்ந்திட பேதம் களைந்து விடு

பற்று பக்தி கொண்டு இரு

வெறியாய் அதை நீ மாற்றாதிரு


மொழி மதம் இனம் நாடு வேற்றுமையில்

மனிதமே அழியுது போற்றுகையில்

மதத்தால் மரணிக்கும் மனிதமதில்

கடவுளும் கற்சிலை கலவரத்தில்


பற்றும் பக்தியும் மாறிடுமா

உருமாறின் வெறியாய் ஆகிடுமே

பேதம் காட்டும் பேதைமையில் 

உன் கண்களும் வெறியால் நிரம்பிடுமே


மொழியோ நம்மை பிரிக்கும்

மதமோ பிறரை ஒதுக்கும்

இனமோ நம்மில் உறுத்தும்

ஒரு காரணியாய் இருக்கும்

இங்கே தமிழன் என்றே சொல்லி சொல்லி

தலைநிமிர்ந்து நில்லு என்பான்

இந்த எண்ணம் உந்தன் நிறைவா

பிற மொழிகளின் தரம் குறைவா

அட எதுக்கு எதுக்கு இந்த பேதம்

மனிதநேயத்தில் உண்டாச்சு சோகம்

என்று அடங்கும் இதனின் தாக்கம்

ஊரே போர்க்கொடி தூக்கும்


மாற்ற நினைக்கும் யாவும்

இங்கே மாற வேண்டுமாயின்

மாற்றம் முதலில்

உனக்குள்ளே வேண்டுமடா


நாட்டுப் பற்று என்றும்

நாட்டை மட்டும் நினைக்கும்

அயல்நாட்டை நம்மில் ஒதுக்கி

அட அயன்மையாய் வைக்கும்

நீ இந்தியன் என்றே என்றும் சொல்லி 

நம்மை பெருமை கொள்ளவே பணிப்பான்

இந்த பெருமை உன்னிலே நிலைக்க

அயல் நாட்டை அரித்தெடுப்பான்

நெஞ்சை கீறி கீறி அதனுள்ளே 

விதை விதைத்திடு உனக்குள்ளே

மரமாய் அதுவும் மாறும் நாளில்

இங்கு மாற்றம் உண்டாகும்


மாற்ற நினைக்கும் யாவும்

இங்கே மாற வேண்டுமாயின்

மாற்றம் முதலில்

உனக்குள்ளே வேண்டுமடா



Rate this content
Log in

Similar tamil poem from Abstract