STORYMIRROR

David Rad

Abstract Romance Others

4  

David Rad

Abstract Romance Others

காத்திருத்தல்

காத்திருத்தல்

1 min
266

ஆவலுடன் நான் காத்து நின்றேன் 

என்னவளின் செய்திக்காக

ஆனாலும் நான் தயங்கி நின்றேன்

எதிர்பார்த்த செய்திக்காக 


குறுஞ்செய்தியால் குறுகுறுத்த உள்ளம்

குறும்பாக இருந்தவனை துரும்பாக்கியதே

இது என்ன உணர்வு என்று என் மனமோ கேள்விகள் பல கேட்கிறதே


நல்லா தான்டி நானும் இருந்தேன்

எனக்குள்ள ஏன்டி நீயும் வந்ந

நீ மட்டும் வந்தா போதாதா 

என்னையும் ஏன்டி எடுத்துக்கிட்ட


முதல் செய்திக்காய் ஏங்கி நின்னேன்

முகத்திலே எதுவும் தெரியாது

நீ பேச ஆரம்பிச்சா

நானோ என்னுள் கிடையாதே


கடலாய் ஆடிய என்னுள்ளம்

மலையாய் அங்கே நிற்கிறதே

என்னுள்ளம் என்னிடம் திரும்பத்தான் ஏதேனும் செய்தி வந்திடுமோ


நான் ஏங்கி ஏங்கி

கை தாங்க நின்னேன்

அவளின் செய்திக்காகத்தான்


உன்ன பத்தி நினைக்கிறேன் நான்

நிதமும் - உனக்கு தெரியாதே

காதல் காரணம் ஆகிடுமா

இதுபோல் இருப்பவன் காதலனா


தூதுரை செய்தி தகவலானது

என் செல்பேசிக்கு வந்திடுமா

தூது அனுப்பவும் மனமில்லை

தூரமாய் இருக்கிறாய் புரிந்திடுமா


ஏங்கி ஏங்கி கையில் 

தாங்கி நின்றேன் 

கைப்பேசியைத்தானே


நல்லா தான்டி நானும் இருந்தேன்

எனக்குள்ள ஏன்டி நீயும் வந்ந

நீ மட்டும் வந்தா போதாதா 

என்னையும் ஏன்டி எடுத்துக்கிட்ட



Rate this content
Log in

Similar tamil poem from Abstract