தமிழ்நாட்டின் பெருமை
தமிழ்நாட்டின் பெருமை
முக்கடல் முட்டும் மூலை இதுதானே
முக்கனி முன்மொழிந்த மூலம் தமிழ்நாடே
முச்சங்கம் வளர்த்த ஊரும் இதுதானே
முத்தமிழ் முழங்கும் மூத்த தமிழ்நாடே
உலகப் பொதுமறையை
உலகிற்குத் தந்து உயர்ந்திட்ட தமிழ்நாடே
கம்பர் வள்ளுவர் ஔவை
போன்றோரை அளித்ததும் தமிழ்நாடே
சுதந்திர போராட்ட விதையாய் சிப்பாய்
கலகம் கொடுத்த தமிழ்நாடே
தேசிய கொடியை தன் முத்திரையில் கொண்ட
ஒரே மாநிலமும் தமிழ்நாடே
தஞ்சை பெரிய கோவில்
மகாபலிபுரம் சிற்பங்கள்
கங்கை கொண்ட சோழபுரம்
நீலகிரி மலை இரயில்
சிறப்பிற்கா பஞ்சம் இவ்வூரில்
அந்த சிற்பிக்கும் இடமுண்டு அச்சிறப்பில்
>உழைப்பிற்கா பஞ்சம் இவ்வூரில்
இன்று உணவும் உடையும் அவ்வுழைப்பில்
படிப்பிற்கா பஞ்சம் இவ்வூரில்
அப்துல் கலாமின் கனவோ அப்படிப்பில்
வியப்பிற்கா பஞ்சம் இவ்வூரில்
எந்த விழியும் விரியும் அவ்வியப்பில்
A.P.J. அப்துல் கலாம்
சர் c.v. இராமன்
கணித மேதை இராமானுஜன்
CEO சுந்தர் பிச்சை
பெருந்தலைவர்கள் திளைத்த பெருநாடே
பாதி பெயரும் புகழும் உன்னிடத்தில்
கல்வெட்டுகள் திளைத்த பொன்னாடே
அதை கற்பிக்க தவறினோம் பலரிடத்தில்
சிற்பங்கள் திளைத்த நன்னாடே
அதை காக்க தவறினோம் இவ்விடத்தில்
ஏரி குளங்கள் திளைத்த என்நாடே
அதை இழந்து விட்டோம் கட்டிடத்தில்