STORYMIRROR

David Rad

Abstract Classics Others

4  

David Rad

Abstract Classics Others

பொங்கல்

பொங்கல்

1 min
308


தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை கொண்டாடிடும் தமிழர்களே

தமிழ்நாட்டை தவிர வேறு எங்கிலும் இல்லை இந்த திருநாளே

 தமிழரின் பெருமையை

தமிழனே அறிய

தலைமுறை ஒன்று போதாதே

தலைமுறை தாண்டிய 

அவனது பெருமையை

தமிழனே நீ என்றும் மறக்காதே


சூரியனுக்கு முதல் நன்றி சொல்லணும் என்று வந்ததே பொங்கல் தினம்

மாட்டிற்கு அடுத்த நன்றி அதை சொல்லி வந்ததே தமிழர் குணம்

வேளாண்மை செய்து வாழ்ந்தான்

அவன் வேட்டையாடுதலை விட்டபின்பு

இன்று வேடிக்கையானது அவன் வாழ்க்கை

இயற்கையும் அவனை கை விட்ட பின்பு


மும்மதமல்ல எம்மதமும் கொண்டாடும் பொங்கலோ தை மாதம்

எம்மதமாயினும் தமிழன்தான் இவ்விழாவினில் இல்லை மதபேதம்

ஆலயத்தில் பொங்கல் வைப்போம் நாம் அனைவரோடும் பகிர்ந்து கொள்ள

அன்பு செய்து வாழ பழகுவோம் 

அகிம்சை வழியினில் நடந்து செல்ல 



Rate this content
Log in

Similar tamil poem from Abstract