Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

David Rad

Abstract Others

4  

David Rad

Abstract Others

என்னாலுமான என்னவன்

என்னாலுமான என்னவன்

1 min
295



நான் என்ற சொல்லை அதிகம் விரும்பினேன்

நாம் என்று மாற்ற விரும்பாததால்

நானாக சென்று யாரிடமும் பேசாதிருந்தேன்

பயமோ பதட்டமோ அல்ல

பயிற்சியின்மையால்


சிறியதிலிருந்து என்னுள் கேள்விகள் ஏராளம்

கேள்விக்கு மேல் கேள்விகளும் என்னிடம் தாராளம்

கேள்விகளுக்கு பதில்களும் கேள்வியானது

வேள்வியில் திளைப்பினும் பதில் கேள்வியானது


புறமகம் பார்த்து பழகாதவன்

புறத்தினால் என்றும் வருந்தாதவன்

அகத்தை முழுதாக காட்டாதவன்

அவனுள் அவன் முழுமையானவன்


தன்னைப்பற்றி தம்பட்டம் அடிக்க பிடிக்காது

இருப்பினும் இயல்பு மீறும் தடுக்க முடியாது

தன்னைப்பற்றி மட்டுமே முதலில் சிந்திப்பவன்

தன்னலம் மீறியும் யோசிக்கிறான்

யாசிக்க கூடாதென்று


கல்லூரி படிப்பு முடிக்கும் வரை 

தன்னிலை மாறியதில்லை

முடித்த பின்பு ஏற்பட்ட மாற்றமும்

இதுவரை எல்லை மீறியதில்லை


கேள்வியைத் தவிர எதையும் கேட்காமலே பழகிவிட்டேன்

கேட்கும் முன் அனைத்தும் கிடைத்துவிட்டதால்

கேடும் கிடைத்தது கேட்காமலே

என் வலிமையை சோதிக்க

அந்த வலியும் வழியானது

விரும்பியதை சாதிக்க


பஞ்சாக இருக்க அனுமதி இல்லை

பதற்றமும் அதிகம் பழகவில்லை

பழகியும் காலத்தால் பேசுவதில்லை

பந்தயம் நான் வைத்தால் தோற்பதில்லை


படிப்பில் பயனில்லை

கல்லூரி வரையிலும்

வேலைக்கான படிப்போ

எந்நாள் வரையிலும்


விளையாட்டில் அதிக ஆர்வம்

வினையானதில்லை இன்று வரை

விரும்பத்தகாத கர்வமும்

நீங்குவதில்லை நாளை வரை


முடிவு எடுக்க நேரம் எடுப்பவன்

எடுத்த முடிவில் என்றும் நிலைப்பவன்

யோசிக்கா செயல்கள் செய்வதில்லை

செய்த செயல்களும் விதிவிலக்கில்லை


எளிதாக எழும் கோபம்

எளிமையை விரும்பும் தேகம்

செயலில் சிறிதே வேகம்

வேகத்திலும் என்றும் விவேகம்

அனுபவித்து விட்டேன் துக்கம்

உணவருந்திய உடனே தூக்கம்

பிறரால் வரும் தாக்கம்

உருவாக்கியதில்லை ஏக்கம்

இந்நிலை என்றும் குற்றம்

என்று உணர்ந்துள்ளது சுற்றம்

விரும்பாதது என்னிலையில் மாற்றம்

விரைவில் வரும் இந்நிலையிலும் ஏற்றம்


புரியாத புதிராகவே இருக்கிறேன் அனைவருக்கும்

அன்னைக்கும் புரிவதில்லை அடியேனின் சில செயல்களும்


என்னிலையை முழுதாக ஏற்கிறேன்

குற்றம் சொன்னாலும் மறுக்கிறேன்

மறுப்பின் காரணம் உருவாக்குகிறேன்

உருவாக்கியபின்னும் எனதாகிறேன்

எனதாயினும் பிறருக்கு ஏளனமாவேன்

ஏளனமாயினும் என்னிலை மாறேன்

என்னிலையிலும் சற்று மாறி நிற்கிறேன்

நிற்பதன் பிண்ணனியையும் விலக்கி விட்டேன்

மாறிய மாற்றத்தை மாற்றாமல் மாறுகிறேன்

மாறினேனா மனதில் தடுமாறுகிறேன்

தடுமாற்றத்தால் தடம் மாறுகிறேன்

மாறிய தடம் மாற வேண்டுகிறேன்


வாழ்த்துகளை விரும்புவதில்லை

வாழ்த்தவும் விருப்பமில்லை

வாழ்த்தாமலே பழகிவிட்டேன்

வாழ்த்த விரும்பியும்

பழகியதால் விட்டுவிட்டேன் 

வாழ்த்தினை ஏற்கவும்


எதிர்காலம் எனதாகுமேயானால்

என்னிலை என்றும் மாறாது

எதிர்காலம் எதிர்பாராததாயின்

என்னிலை என்னில் வாழாது


எனக்காக என்னாலுமான என்னவனைப்பற்றிய எனது எண்ணங்களை எளியோருக்காய் எளிமையாக்க எண்ணவில்லை

எளிமையாக்கும் எண்ணமுமில்லை.......,



Rate this content
Log in

Similar tamil poem from Abstract