STORYMIRROR

David Rad

Abstract Inspirational Others

4  

David Rad

Abstract Inspirational Others

"தேசமும் தமிழும்"

"தேசமும் தமிழும்"

1 min
216


என்ன தவம் செய்தோம் 

என்ன தவம் செய்தோம் 

தமிழனாய் இங்கே பிறக்க

தமிழே நம் தாய்மொழியாக

என்ன தவம் செய்தோம் 

என்ன தவம் செய்தோம் 


மறைக்கின்ற பெருமை மொழிக்கு சிறுமை விழித்துக்கொள் என் தமிழினமே

மறைத்திட பார்க்கும் நீ வாழும் நாட்டிலோ எல்லாம் இங்கு சிலைமயமே

தமிழரின் பெருமையை தமிழனே அறிய தலைமுறை போதாதே

தலைமுறை தாண்டிய அவனது பெருமையை தமிழனே மறக்காதே

இத்தனை சிறப்புள்ள இம்மண்ணில் பிறந்திட


என்ன தவம் செய்தோம் 

என்ன தவம் செய்தோம்


மனிதனாய் பிறந்த யாவர்க்கும் இங்கே தாய்மொழி என்ற ஒன்றுண்டு

அந்த மொழிகளின் தாயாய் இருப்பது நமது தமிழ்மொழி அன்றி வேறுண்டா 

உலக நாடுகள் அனேக இடங்களில் தமிழனின் கால்தடமே

உத்தி அறியா நமது நாட்டிலோ தமிழும் நடைபிணமே

இத்தகைய நிலையை இனிமேல் மாற்றிட


முயற்சி எடு நீயும்

முயன்றாலே முடியும்

தமிழினை கற்று அறிய

அறிந்ததை உலகிற்கு சொல்ல

முயற்சி எடு நீயும்

முயன்றாலே முடியும் 



Rate this content
Log in

Similar tamil poem from Abstract