அறியாது தவிக்கிறேன்...!!
அறியாது தவிக்கிறேன்...!!
ஜில்லென்று காற்று வீச
மரங்கள் பூக்களை அழகாய் தூவ
மழைச்சாரல் மெல்ல மண்ணைத் தழுவ
மண் வாசம் எங்கும் பரவ
ரசித்துக் கொண்டே மெல்ல நடந்த
என் கண்களில் மின்னல் என பட்டால்
தன் கைகளால் மழைச் சாரலில் விளையாடிய பூவை...
அவளை கண்டதும் ஏனோ அகிலமே சம்பிக்க
நானோ அவளை நோக்கி அடி எடுத்து வைக்க முயல
இதயம் படபடக்கத் தொடங்க
மூச்சுக் காற்றும் வே
கம் எடுக்க
செய்வதறியாது மெல்லச் சென்ற எனது
விழி இமைகள் மூடவும் மறந்து அவளையே பார்க்க
தற்செயலாக என்னை கண்டவளின் பார்வை
புருவம் உயர்த்தி என்ன என்பது போல் வினவ
வில்லில் இருந்து வந்த அம்பால்
அவள் கேள்வி மனதில் குத்த
ஒன்றும் இல்லை என மௌனமாய் தலையசைத்து விட்டு
சென்ற என் மனமோ அவளையே எண்ணிக் கொண்டு
இம்சை செய்ய... தீர்வு என்ன என்பது அறியாது தவிக்கிறேன்...!!!