நிரந்தரமானவள்
நிரந்தரமானவள்


ஒவ்வொருத்தியாகத் தேடித்தேடி உன்னை வந்து சேர்வேன்.
அல்லது
உனக்குப்பின் ஒவ்வொருத்தியிலும் உன்னையே தேடுவேன்.
எப்படியாகினும் நீயே நிரந்தரமடி கண்மணி!
உன்னை வரித்து மனதில் உருவேற்றி வைத்திருக்கிறேன்,
ஒவ்வொரு காதல் முடிவுறும் போதும்
பிரியங்கள் விடைபெறும் போதும்
நானுனை நினைத்துக் கொள்கிறேன்.
உன்னாலேயே விட்டுப்போக முடியும்போது இவர்களெல்லாம் எம்மாத்திரம் என்று அமைதியாகிறேன்
இப்போதும் நீதான் என்னைத் தேற்றுகிறாய்
நீ நிரந்தரமானவள் கண்மணி!