கண்மணியின் காதலன்
கண்மணியின் காதலன்
1 min
304
கண்மணிகளிள் காதலனாவதற்கு
வாள் சுழற்றத் தேவையில்லை
காளை அடக்க வேண்டியதில்லை
அம்பெடுத்து அர்ஜுனனாய் கயலின் விழி நோக்க அவசியமில்லை
தொடுத்த வினாக்களுக்கெல்லாம் பதிலளிக்கும் ஆற்றலொன்றும் பிரதானமில்லை.
கண்மணிகள் பெருஞ்செல்வம் எதிர்பார்ப்பதில்லை
பல்கலைப் பண்டிதங்கள் தேடுவதில்லை
மேலத்தெருவா கீழத்தெருவா ஆராய்வதில்லை.
Fair and tall
Professional degree
Same caste
Teetotaler
யாவும் புறந்தள்ளும் கண்மணிகளுக்கு …
வார்த்தைகளில் அன்பின் மனம் உணர்த்துபவன் மீது
காதல் வந்ததில் ஆச்சரியமேதுமில்லை💙