கேட்பவர்கள்
கேட்பவர்கள்


என் பிரிவொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன்
என் புரிதலொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன்
என் கனவொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன்
என் வலியொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன்
என் மீட்சிக்கான பரிதவிப்பொன்றை சொல்லிக்கொண்டிருந்தேன்
நான் எப்படியிருக்கிறேனென்று சொல்லிக்கொண்டிருந்தேன்
ஒரு கொட்டாவி சட்டென எல்லாவற்றையும் விழுங்கிவிட்டது சொல்ல வந்தது எனக்கும் பாதியில் மறந்துவிட்டது
அவ்வளவுதான் இந்த உலகில் சொல்ல முடியும். சொல்பவர்கள் தூங்காதிருக்கலாம். கேட்பவர்களுக்கு சீக்கிரமே தூக்கம் வந்துவிடுகிறது