அற்பங்கள்
அற்பங்கள்


கையேந்தி அலையும்
இந்த மானுட உருவங்களாக
இந்த உலகினில்
வந்தது ஏனோ?....
கையேந்தி சிலர்
கைகள் தட்டி ...சிலர்
இல்லாத வதைகளும்
இல்லாத இன்முகம்
இங்கே வைத்து
நகர்கின்றனர்....
அவர்களுக்கும்
மனமுண்டு....
அதில் மெல்லிய உணர்வும் உண்டு!
இரண்டாய் ...
ஓர் வாழ்வு
ஒருவேளை
இருவாழ்விகளோ இவர்கள்..
கைகள்
கொடுத்து தான் பார்த்திருந்தால்
பொது-உடைமை பொருளாய்
ஏன் அந்த பிழைப்பு
அர்த்த இருளில் சிலர்......
சிலர் வெளியில்
பொறுப்புகளுடன்
வெளிச்சஉலகில்
சிலர் பொறுமையுடன்
இருளில்......
பொதுமைவாதிகள் நாங்கள்
என் பலரும் இருக்க
இருப்பினும் ஏன்
இவர்களுக்கு மறுப்புகள் தான் எங்கும் ...
அலிகள்
அரவாணிகள்
இன்னும் இன்னும்
எத்தனை எத்தனையோ
இழிவு பட்டங்கள்
அடுக்கி வைக்க
அலமாரிகள் தான் இல்லை..
இங்கு சமூக சீர்கேடு அவர்கள்
தான் என பலரும்
கூவிக்கிடக்க
காரணம் தான்
யாரோ? என
யார் தான் அறிவாரோ....
&
nbsp;அவர்களுக்கான இடங்கள் இன்னும்
ஒதுக்கப்படவில்லை
ஆனால் இட ஒதுக்கீடுகள்
மட்டும் உண்டு..
புறம்போக்காய் அவர்கள் சுற்ற
நிலங்களாவது
பட்டா வாக ஏன் இல்லை அவர்களுக்கு...
இங்கு கவனிக்க ஆளில்லை
கேலி செய்ய பஞ்சமுமில்லை!!!
தள்ளு வண்டிகளுக்கா
தமிழ்நாட்டில் பஞ்சம்
தள்ளாடும் வாழ்விற்கு
தள்ளுவண்டி பிழைப்பே அவர்களுக்கு போதும்
தருவார் யாரோ அவர்களுக்கு????
பொதுக்கழிப்பறைகள் பல
மூடியே கிடக்க
அவர்களுக்கான ஓர் கழிப்பறைதான் எங்கே???
பேசுபவர் பேசட்டும் என
அவர்கள் பழகிவிட்டனர்
ஆனால் நாம் ஏனோ
அவருடன் சேர,
அவரை சேர்க்க பழகிடவில்லை...
ஒரு நபர் அவர்களுக்கு அங்கிகாரம்
அளிக்க ஊர் மாறுமோ
என கேட்டால் ,
மாறும் !!!!
நீ மாறினால்
நாளை யாவரும் மாறுவார்....
அரசாங்கமே தான்
சமநிலை பார்க்க வேண்டுமா
என்ன
விவசாய கூலிக்காக,
வீட்டு வேலைகளுக்காக,
தூய்மை பணியாளராக..
அலுவலக உதவியாளராக,
இன்னும் எத்தனை எத்தனையோ
நாம் பார்க்கும்
பார்வை கோணங்களே
மாற்றம் தரும்..........