அரிதாரம்
அரிதாரம்
1 min
9
இங்கு பச்சோந்திகளும்
காக்கைக்கும் அதிகம் தான் ..
அதற்காக உன்னை நீ தந்திர
நரியாக பாவித்துக்கொள்ளாதே
நீயும் பச்சோந்தியோ
காக்கையோ
அவ்வப்போது சூழ்ந்து நிற்கும்
சூழ்நிலையே தீர்மானிக்கும்,
ஆயினும் கூட
புலியாகவே இரு
போலி வேடமிட்டு
சிங்கமாய் பாவனைகள்
அரங்கேற்றம் செய்யாதே......
சாரலே போதும்
அரிதாரம் அவிழ
பெருமழை தேவையன்று.......