STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Fantasy

3  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Fantasy

ஓடும் இரயிலில்

ஓடும் இரயிலில்

1 min
156

ஓடும் இரயிலில் 

நானோ ஓர் 

சாளரத்தின் அருகில் இருக்க,

மேகங்கள் சூழந்து 

கண் பார்த்து இன்பமதை 

விவரிக்க வரிகள் 

நான் அலச,

தடக்தடக் என

சிறு சத்தமும் 

இடியுடன் இன்னிசையாய்

செவி சுவைக்க,

காதலில் நான் மூழ்கி

இருக்க ஓரமாய் ,

ஓரமாய் வந்தது 

ஓராயிரம் நினைவுகள் 

வயதென்னவோ கால் 

நூற்றாண்டினை நெருங்க,

நினைவுகள் ஏனோ 

நூற்றாண்டின் தொடக்கம் தான்,

 காலம் எது 

எதுவாயினும் சரி 

காதலி அவள் எங்கிருந்து 

பார்த்தாலும் 

எழில் தானே.....

 விரிந்த புல்வெளிகள் 

ஓர் புறம் ,

அதில் ஆமேய்த்து 

ஆரவாம் கொள்ளும் 

சிறு பிள்ளை. 

கூடவே துள்ளலிடும் 

வெள்ளாடும் ஓர்

ஞெள்ளையுள் விளையாட

மாலை பொழுதில் 

ஆனந்த மாலையை அனிந்த 

மழலையும்.

மறுபுறம் அடர்ந்த காடுகளும் 

பொட்டல் காடுகளும் 

அதில் ஓர் சிறுகளிப்பாய்

நிறமது வெவ்வேறாக 

சிறு சிறு வல்லூறும்

பெரும் பெரும் உயிரினங்களும் 

உலவ கண்டு.

ஓடும் வண்டியில் 

ஓராயிரமாய் 

அரிதாரமது 

அது மூளையின் மூலையில் 

ஓராயிரம் எண்ணங்கள்......

ஆயிரம் ஆயிரம் தான் 

அரிதாரங்களுடன் 

அண்டம் அது விதவிதமாய் 

தோன்றினாலும் கூட 

இந்த இரயில் வண்டி 

தான் நாம் வாழ்வும் 

வளைவு நெலிவும் 

இருளும் பகலும் 

ஓட்டமும் 

சில நேரம் பழுதாய்

சில நேரம் சுமையற்று

வந்து சேரும் இடம் அது

வந்தால் இறங்கி தான் 

ஆகவேண்டும்.

அடுத்த நிலையம் 

பாதையில் வரலாம் 

வாழ்வில் வருமோ என்பது அறியாமல் 

தான் நகர்தல் வேண்டும்.............




Rate this content
Log in

Similar tamil poem from Fantasy