குறையாத குளிர்கால மழை
குறையாத குளிர்கால மழை


அந்திமாலை பொழுது கார்மேகம் படர்ந்து நிற்கும் வேலை,
என்ன ஒரு அற்புதமான காட்சி இதை காண இரு கண்கள் போதவில்லை என்னக்கு,
வீசும் தென்றல் என்னை வந்து கட்டியண்ணைக்கும் தருணம் நான் மீண்டும் பிறந்தேனே.
அளவில்லா மகிழ்ச்சி மனதில் பொங்க காதுக்கு இதமாக பறவைகள் இசைக்க,
இன்ப ஒலி பயா கால்கள் தானாக நடனமாடின தெருவில் இருக்கும் மழை நீரை கடக்க,
மழை பெய்து சற்று நேரம் தான் ஆனது இன்னும் மண்ணின் மனம் மாறவில்லை.
இப்படி ஒரு நாளுக்காக நான் காத்து கிடந்தேன் தவமாய் பல நாட்களாக,
இன்று இயற்க்கைக்கு சேவி கேட்டுவிட்டது எனவே மழை பொழிந்து புத்துணர்ச்சி அளித்தது,
குளிர் காலம் என்ற போதும் மழையை ரசிகத்தவர் எவரேனும் உள்ளாரோ.
கையில் இருக்கும் குடையும் துறந்தேன் மனதில் இருக்கும் வெறுமையும் துளைத்தேன்,
மழை என் முகம் மேல் விழ புதிய மனிதியாக மாரி புன்னகைக்கிறேன் வானத்தைப்பார்த்து,
இன்னும் சற்று நிமிடங்கள் இந்த மழை நீடித்து இருந்தால் உள்ளம் கொள்ளை போயிருக்கும் இந்த மழைக்காக!