மாற்றத்தின் நிறம்
மாற்றத்தின் நிறம்
மாலை பொழுதில் மல்லிகையின் வாசம் வீச,
நித்தம் சிவந்தது மஞ்சளாக என் மனம்,
என் அன்பு மகன் ஓடி வர அவனை துரத்தியது எங்கள் செல்ல கண்குட்டி,
இன்று எங்களின் தோட்டத்தில் பூத்தது மஞ்சள் நிறம் பூக்கள்,
மாலையில் மறையும் சூரியனின் ஒளி கதிர்கள் மஞ்சள் நிறத்தின் வெளிப்பாடு,
என் கண்களில் தெரியும் மகிழ்ச்சியின் நிறம் மங்கள மஞ்சள்,
இப்படி இருக்கும் சமயத்தில் நாளை அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கின்றது மஞ்ச கிழங்குகள்,
மஞ்சள் நிறமே என் வாழ்க்கையை மாற்றிய நிறமே.