ஒரு நன்நாளே
ஒரு நன்நாளே
இந்த நாள் ஒரு நன்நாளே!
இன்று என் வாழ்வின் மிக முக்கியமான நாள்,
இதை பிறந்த நாள் என்று சொல்லவா,
இல்லை என்னை என் அன்னை இன்ற நாள் என கூறவா,
இரண்டுமே ஒன்று தான்.
இந்த நாள் ஒரு நன்நாளே!
இந்த நாளே என் மணநாளாகும் என்று ஒரு பொதும் நான் எண்ணவில்லை,
கனவுகள் பல கண்டேன் வாழ்வில் பெரிய சாதனை படைக்க,
கடினமாக உழைத்தேன், விரும்பி படித்தேன்,
படிப்பில் முதலிடம் பிடித்தேன்.
இன்று எனக்கு திருமணம்,;ஆனால் நாளை எனக்கு வேலைக்கான தேர்வு,
செய்வது அரிய இருந்தேன் நான்.
மாப்பிள்ளை தாலி கட்ட இனிதே நடைபெற்றது என் திருமணம்.
என் கணவர் என்னிடம் கேட்டார்,
நாளை தேர்விற்க்கு நீ தயாரா என்று.
இந்த நாள் நான் அறிந்தேன், இன்று தான் என் வாழ்வின் மிக முக்கியமான நாள் என்று.
என்னை மணந்த நல்ல உள்ளம் கேட்ட கேள்வி அவரின் அன்பை உணர்த்தியதே,
இந்த நாள் ஒரு நன்நாள்!