பசுமை வண்ணத்து உலகம்
பசுமை வண்ணத்து உலகம்


என் அழகிய தோட்டத்தில் இருக்கும் மரங்களின் இலைகள்,
காற்றின் அசைவில் ஆடும் இலைகள் அவற்றின் நிறம் பச்சை.
இலையில் இருக்கும் வண்டின் ரிங்காரம் ஒரு மென்மையான இசை,
இசையை கேட்டு மகிழும் மனமோ பசுமை எண்ணத்தில் திகைகிறது.
என் தோட்டத்தில் இருக்கும் பழ மரங்கள் பச்சை கிளியின் வீடுகள்,
மரகதம் போல மின்னும் கிளிகளின் மேனி,
அவற்றின் இனிமையான குறலுக்கு என் காதுகள் எப்பொதும் காத்திருக்கும்.
பச்சை புல்லை உண்ணும் பசுக்கள் அவற்றை காண என் கண்கள் ஏங்கும் தினமும்,
பசுவின் தன்மை என்றுமே மாறாது மற்றவர்களுக்கு நன்மை செய்யும் பசுவின் பசுமை குணம் என்னை கவர்ந்தது,
என் பிள்ளைகளின் அன்பில் கண்டேன் பசுமை என்ற உணர்வை,
அவர்களின் அன்பு என்னை மிகவும் மகிழ்வித்தது,
மகிழ்ச்சியில் இருந்த என் மனம் பசுமையான என் நினைவுகளை நினைவுட்டியது,
என் காதல் மனைவி வந்தள் என்னை காண தோட்டத்திற்க்கு,
அவளின் கண்களில் கண்டேன் பசுமையான காதலை,
இப்படி ஒரு நாளில் நான் கண்டேன் பல பசுமையான நினைவுகளை,
வண்ணத்தின் வழியே கண்டேன் என் உலகத்தையே.