நட்பு
நட்பு
நம் பள்ளிப்பருவ நட்பு இன்றும் அலாதியானது, அவை தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் உருவானவை. நாம் பார்த்த, படித்த, பழகிய விஷயங்களை சேகரித்து பள்ளி செல்லும்வரை காத்திருந்து நண்பர்களிடம் பரிமாறிக் கொள்ளப்பட்டவை.
தற்கால நட்போ தான் நினைத்ததை நினைத்த நேரத்திலே பேச முடிவதால் அதன் ருசி சற்று குறைவுதான், அதுவும் அவர்கள் பார்க்கும், படிக்கும், பழகும் விஷயங்கள் ஒரு சிறிய வட்டத்திற்குள்ளானவை (Facebook/social media).
சமூக வலை Social Media நம்மை ஒன்று சேர்த்திருக்கிறதா? ஆம், அனைவரையும் ஒரே இடத்தில் அமரச் செய்திருக்கிறது கண்ணில் கடிவாளத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாதபடி.
