குட்டிக் காதலி
குட்டிக் காதலி


கைபேசி கையில் இல்லாத அழகிய பேருந்து பயணம் அது.
முன் இருக்கையில் பெண் குழந்தை ஒன்று இருக்கையின் மேலேறி தன் பிஞ்சு கைகளால் கம்பியை பிடித்து அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வேலை செய்து கொண்டிருந்தது.
அதன் மழலை அழகில் மயங்கி லேசாக கண் சிமிட்டினேன்.
முதலில் முறைத்து, பின் சிரித்து, என் விரல் பிடித்து கடித்து சேட்டைகள் செய்து கொண்டிருந்தாள்.
பின் நான் சேட்டைகள் செய்ய தொடங்க தன் அம்மாவிடம் கைகாட்டிவிட்டு கண் சிமிட்டுகிறாள் ராட்சஷி. என் குட்டி காதலி.