சுகம் கொடுத்த கனவு சோகமும் கொடுத்ததே
சுகம் கொடுத்த கனவு சோகமும் கொடுத்ததே
ஒரு அழகான சோக கதை சொல்லவா??
இருண்ட நள்ளிரவு குளிர்ந்த காற்று என்னையே பின் தொடர்வது போல இருக்கும் தட்டு இட்லிபோல நிலா 😁
இந்த இளவரசியை அழைத்து செல்ல தோழிகளாய் மின்னும் என் நட்சத்திர வானம்
அமைதியான மலை பிரதேச தெருவில் சற்றே விட்ட மலையின் சிறு மீதமுள்ள துளிகள் என் மீது சீண்ட
என்னவன் என் கரம் பிடிக்க அந்த நிமிடம் இவை அனைத்தும் எனக்காகவே எழுதப்பட்ட காட்சி போல தோன்ற இயற்கை அன்னைக்கு நன்றி கூறினேன்....❤
ரோட்டோர கடையில் குடித்து தேநீர் தராத சூட்டை அவன் கண்கள் கொடுத்த அந்த நொடி..
என் ரத்த குழாய் வெடித்து எரிமலை ஓடுமளவு கதகதப்பு அப்படியே மடிந்து அவன் மடியில் கிடந்தால் கூட கவலை இல்லை
இருவர் நடந்த தூரம் மறந்து செல்ல தெருவோற கடையின் தோசை வாசம் அவனோடு உணவருந்த என் பெண்மை துடித்தது ❣️
கைகள் சிலிர்த்து குளிரில் நடுங்க அவனே ஊட்டிவிட்ட அந்த நிமிடம் எனக்கு முதலில் உணவிட்ட என் அன்னையின் நியாபகம்...அவனின் அவள் போல உணர்தேன் அவனோடு பல யுகம் வாழ்ந்த உணர்வு என் மனதை சிலிர்க்க....கலங்கியது கண்கள் விழி திறந்து கனவு என்றரிந்தவுடன் ..
கண்ணீரோடு உன்னவள் 🥰....