தவிக்கிறேன்
தவிக்கிறேன்


சிறுவயதில் தொடங்கிய நட்பு
இன்பத்துன்பம் எல்லாம் பகிர்ந்து
எந்தவித ஒழிவும் மறைவும் இன்றி
ரகசியங்கள் இன்றி அழகாய் செல்ல
எப்பொழுது வந்தது என்றே தெரியாமல்
அவள் மீது காதல் வந்தது...!!
தோழியாய் மட்டும் பார்த்துக் கொண்டிருந்த அவளை
என்னவளாக எண்ணத் தொடங்கியது மனம்
அவளிடம் எந்த மாற்றமும் இல்லை
அவள் எப்போதும் போல் இருக்கிறாள்
ஆனால் ஏன் என்னில் மட்டும் மாற்றம
்
கேள்விகள் கேட்டு தோற்றுப் போனேன்...
என் உணர்வுகளை வெளிப்படுத்தாது மௌனமானேன்...
உண்மையான நட்போடு அவள் இருக்க
மனதில் புகுந்த காதல் நட்பை தாண்டி செல்லச் சொல்லி
நாள்தோறும் இம்சிக்க என்ன செய்வது என
அறியாது தவிக்கிறேன் அவள் நினைவுகளுடன்
அனுதினமும் பொய்யாய் நடித்துக் கொண்டு
நட்பு காதல் எனும் இரு தண்டவாளங்களுக்கு இடையே
மாட்டிக் கொண்ட மனதை மீட்க வழி தெரியாமல்....!!!