STORYMIRROR

Nithyasree Saravanan

Romance

5  

Nithyasree Saravanan

Romance

மறக்க முயல்கிறேன்...!

மறக்க முயல்கிறேன்...!

1 min
478


வசிய பார்வையால் என்னை என் வசம்

இல்லாமல் செய்த மாயமோகினி அவள்... 

காதல் என்ற மந்திரத்தில் என்னை கட்டுண்டு 

விழச் செய்து அவள் பின்னால் சுற்றச் செய்து 

பைத்தியக்காரனாய் ஆக்கி ரசித்தவள் 

என் மேல் காதல் இருப்பது போல் நாடகம் ஆடி 

என் மனதை மயக்கி ஆட்டிப் படைத்தாள்.... 

நானும் அவள் மீது கொண்ட காதலால் 

அவள் நடிப்பையும் உண்மையென எண்ணி 

விழுந்து கிடந்தேன் அவள் காலடியில்... 

என்னை விட வசதியில் உயர்ந்தவன் கிடைத்ததும் 

என்னை எட்டி உதைத்தவள் விட்டுச் சென்றாள் 

அவள் பிரிவு தந்த வலியோடு மதுவின் துணையோடு 

நினைவுகளை புகை விட்டு மறக்க முயல்கிறேன்....!!!



Rate this content
Log in

Similar tamil poem from Romance