கவிதைகள் சொல்லவா...
கவிதைகள் சொல்லவா...


நான்
சொல்வதற்குள் முந்திவிடுகிறது
என் கவிதை,
உன்னிடம்
காதலைச்சொல்ல.
***
உனக்காக
எழுத நினைத்தேன்,
முடியவில்லை.
இதோ
உன்னையே எழுதி விட்டேன்.
***
உன்னை நினைத்தும்
கொட்டிவிடுகிறது
என் காதலும்,
பேனா மையும்,
கவிதைகளாய்.
***
என்ன அவசரம்?
இதை படித்துவிடாதே!
இன்னும் இருக்கிறது
என்
கவிதையும்,காதலும்.
***
என்
கரும்பேனா மையும்
சிவப்பானது.
உனக்காக கவிதை எழுதையில்,
வெட்கத்தால்.
***
நான் எழுதியவை
அனைத்தும்
உன்னைப்பற்றி
எழுதுவதற்கான
ஒத்திகை கவிதைகளே!
***
என்
தமிழும் கூட
வார்த்தைகளுக்காக அலைந்துகொண்டிருக்கிறது.
நான் எழுதும்,
உனக்கான கவிதைகளில்.