உன் பார்வையில்…
உன் பார்வையில்…


மயங்கித்தான் போவேன்.
உன் பார்வையில்
காதலை
இப்படித் தூவினால்.
***
பேருந்தில் எதிர்காற்றைப்போல்
ஒவ்வொரு முறையும்
உன்னை
ஏறிட்டு பார்க்க முடியாது
தவிக்கிறேன்.
***
உன்னைப் பார்த்த நொடியில்
நின்றுவிட்டது,
என்
நினைவும்,கடிகாரமும்.
***
நீ பார்க்கும்
ஒவ்வொரு பார்வையும்
`இது போதுமா?`
என்று கேட்பதுபோல்
தோன்றுகிறது.
***
உன்
ஆசைக்கான பார்வை,
என்னிடத்திலும்,
என்
தேவைக்கான பார்வை,
உன்னிடத்திலும்.
***
அப்படிப் பார்த்துவிட்டு
என்னை
நெருங்காதே!
மெழுகாய் உருகிவிடுவேன்.