காதலாய்க் கசிந்தேன்
காதலாய்க் கசிந்தேன்


ஒன்றோடு ஒன்றாகநாம் கலந்தபோதினிலும்
என்பெண்மை கொண்டாடநீ தந்த சிறு இடைவெளி
-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
நீவேறு நான்வேறு விவாதங்கள் நேரும்போது
ஆண்மையை வருடிவிடும்நான் சிந்தும் மௌனமது
- அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
இருவேறு திசைகளிலே நாம்முந்திச் சென்றாலும்
இலக்கதனை வெல்கையிலே நாம்தேடும் நம் சுவரிசம்
- அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
என்னுடைய கனவுகளைநீ வாங்கிச் சுமக்காமல்
என் முதுகிலேற்றி வைத்து நீ உணர்த்திய எனதுபலம்
-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
குறைகளுண்டு நிறைகளுண்டு இருவருமதைப் புரிந்துகொண்டு
நாமாகவே நாம்வாழந்திட பழகிக்கொண்ட நம்முதிர்வு
-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
சரியேது தவறேது பிணக்குகள் தோன்றும்போது
தன்முனைப்பை தகர்த்துவிடும் நாம்நாடும் தனிமையது
-அக்கணம் காதலாய்க் கசிந்தேன்
காதலில் கசியாமல் காதலாய்க் கசிகின்றேன்
இன்னும் பல கணங்கள் கசிந்திடத் துடிக்கின்றேன்!