கள்வனின் காதலி.....!
கள்வனின் காதலி.....!


"எதைக்கவர்தாலும் அது
களவு அல்லவோ......
அவன் என் மனதை கவர்ந்ததால்
நான் கள்வனின் காதலி ஆனேனோ.............
களவு செய்தவனை
காணமல் என் மனம்
உறங்காதோ.....
களவாடியவன் களவு செய்த பொருளை.....
கையுடன் எடுத்துச் செல்வதே மரபு...............
மனதை களவாடியதோடு
அவன் சென்று விட்டான்....
களவாடியவனை காணது
நான் அல்லல் படுகிறேன்...
காதலி தவிப்பாளே என்று
கடுகளவேனும் சிரத்தை உள்ளதா....
மலர்சோலையின் தென்றல்கூட
எனக்கு சுடுகிறதே......
என் விழியோர நீர்திவலைகளுக்கு
வந்து விளக்கம் தருவான.....?
மாலை சூடியிருப்பின்
காத்திருப்பதில் இன்பமுண்டு
மாலை சூடும்முன் காத்திருப்பதில்
துன்பம் மட்டுமே....
காதல் நோய் ஆட்கொண்டு
நான் கலங்கிநிற்கிறேன்
மருந்து நீயென
உன் மனம் அறியாதோ.....
ஆறுதல் சொல்ல
தோழியையும் இல்லை
ஆகாயமும் பூமியும்
எனக்கு ஆயுள்சிறையானதோ
துவண்டு போகிறதே மனது.....
மாலை மயங்குவதற்குள்
அகல் மார்பினன் வந்து என்னைஅணைப்பானோ.....
விழிகள் தேடுதே
விரகம் உருவாகுதே......
விரைவில் வருவாயோ
என் விரகதாபம் தீர்ப்பாயோ
என் மன்னவா
நான் உன்னவள் அல்லவா.......
கள்வனின் காதலியின்
கவலைகள் தீர்க்க
கரும் புரவிமேல்
கணநேரத்தில்
காற்றென வருவாயோ.....
தென்றலாய் தழுவி
நீராய் குளிர்வித்து
என் மனத்தீயை அணைப்பாயோ....
உன் மார்பில் புதையல் எடுக்க
இந்த மங்கை காத்திருக்கிறாள்......!