STORYMIRROR

Siva Kumar

Others

5  

Siva Kumar

Others

நீலவான ஓடையில்.....!

நீலவான ஓடையில்.....!

1 min
442


"இதோ என் விசாலமான மனது

என பறந்து விரிந்து கிடக்கின்றது...

உலகத்தின் போர்வையாய்......

வானம்....நீலவானம்.......!


"பூமியின் எழுபது விழுக்காட்டை

தன்னுள் அடக்கிய கடல்....

அதுவும் நீல நிறம்.....

வானும் கடலும் .....

கைகுலுக்கியதோ......

வாழ்கை இதுவென....

உனக்கு உணர்த்திதோ......

நீலம் மனதில் நிறைந்து....

போனதுவே.........

பிரபஞ்சத்தின் விஸ்தாரமான...

எல்லாமே நீல நிறமே......!


"நீலநிறம் அறிவுத்திறனையும்...

நம்பிக்கையையும்.....

தர்க்கரீதியான செயல்பாட்டையும்..

குறித்து மனதுக்கு இதமளிக்கும்....

நீலவானம் எண்ணங்களை....

சீராக்கி சிந்தனையை......

தூண்டுகிறது.......

அதனாலேயே கவிஞரின்...

எண்ண ஓட்டங்கள்.....

நீலவானத்தில் லயிக்கிறது....!


"தினம் தினம் ஒரு மாற்றம்.....

மிகதெளிவாக ஒரு நாள்....

மந்தமாக ஒரு நாள்......

கார்மேகம் மறைத்தாலும்...

கலங்காமல் ஒரு நாள்.....

கண்ணை பறிக்கும் ஒரு நாள்..

வெண்மை போர்தி ஒரு நாள்...

வித விதமான நீல உடைகளை...

தினம் தினம் மாற்றும் வான்மகள்....

வாழ்க்கையின் சூட்சுமத்தை...

அள்ளித்தரும் பூ மகள்.....!


"இயற்கை சுழற்சியில்.....

எத்தனை மாற்றங்கள்....

வந்த போதும்.......

தன்னை நிலை நிறுத்தும்....

தனிமகள்........

நிலவும் கதிரும்......

ஓடி விளையாடும்........

ஆகாய மைதானம்.......

நீயும் நானும் கவிபாட.....

கற்பனை கொட்டும்.....

கவிக்கூடம்...........!


"காதலன் மலை தானோ...

இதழ் என்னும் முகட்டில்....

இறங்கி முத்தமிட்டாய்.......

இரவில் நச்சத்திர ..........

உடையணிந்து........

நாணி நின்றாயோ....!


"தினம் தினம் மாலையானதும்.......

ஹோலி வந்ததோ......

வண்ணங்களை வாரி பூசுகிறாய்...

மழைக்காலத்தில்.....

உன் அழகே தனிதானோ...

உன் கார்மேக கூந்தலை....

அள்ளி முடித்து.....

கொண்டையிட்டு.....

வானவில் பூச்சூடுகிறாய்....

வண்ணம் பல காட்டி.....!


"என் கற்பனைகளை......

பட்டமாக பறக்க விடுகிறேன்...

உன்னை தொட்டுவிடலாமென்று....

நீ இதோ இதோ என்று....

கண்ணாமூச்சி காட்டுகிறாய்....

அண்டத்தில் ஆவதரித்த...

கவிஞர்க்கெல்லாம்....!


"நானே அறிச்சுவடி என்றுரைத்தாய்...

கவிஞரின் முதல் காதலியாய்...

நெஞ்சுக்கு அமைதி தரும்.....

நீலவானமே.......

நித்தமும் செய்தி்தரும்......

அட்ஷய பாத்திரமே......

முகிலாக எத்தனை பொய்கள்...

சூழ்ந்தாலும்......

அதை நிஜமாக வென்று ....

நீலவானமாய்....

நிமிர்ந்து நிற்க்கின்றாய்.....!


"உலகத்தின்கூரையாய்...

பூமியில் எத்தனை....

பிரளயங்கள் வந்தபோதும்...

பூமியை வளர்த்தெடுதாய்..

தாய்மையும் உன்னில் கண்டேன்....

நீல வானமே.......!


"உன்னிடம் கற்றுக்கொண்டடேன்..

ஔிவுமறைவில்லா தன்மையை...

உன்னிடம் கற்றுக்கொண்டேன்...

பரந்தமனப்பான்மையை....

உன்னிடம் கற்றுக்கொண்டேன்...

எல்லோரையும்........ 

அரவணைத்துச் செல்ல......

உலக்கிற்கே ஆசானாய்.....

உன்னைக் கண்டேன்.....

நீலவானமே.............!



Rate this content
Log in