STORYMIRROR

Siva Kumar

Inspirational Others

3  

Siva Kumar

Inspirational Others

வெற்றிக்கு வழி

வெற்றிக்கு வழி

1 min
176

"கடவுளின் பாதம் தொட்டு  

காரியம் தொடங்கி விட்டு

தன்னம்பிக்கை விதையை போட்டு

வேர்வை நீரை ஊற்று

நன்றாய் வருமே நாற்று

நாளை உனதென போற்று

நல்லவரிடம் ஆலோசனை கேட்டு

அல்லவரிடம் கவனத்தை கூட்டு

அச்சத்தை வெளியே ஓட்டு

அறிவை செயலில் காட்டு

சுயமுடிவை உரமாய் போட்டு

சுபமாய் முடித்துக்காட்டு

கால நேரம் பார்த்து

கடின உழைப்பை காட்டு

கனிந்து வரும் வெற்றி

பல தடைகளையும் அகற்றி

உண்மையும் பறிவும் காட்டு 

அது உன்னத நிலையைக் காட்டும்

பொறாமை பொய்யை ஓட்டு

உன் பக்கம் வீசும் காற்று

அன்பும் பண்பும் காட்டு

நல்ல நட்பை நாளும் போற்று 

கனிந்த பேச்சை பேசி

காலம் உனக்கு உண்டு யோசி

இவை அனைத்தும் இருந்தால் போதும்

துன்பம் விலகி ஓடும் 

இன்றே அடிக்கல் போட்டு

வெற்றியை நிலை நாட்டு....!



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational